பரலோக தேவன் பூலோகம் வந்தார்
மகிழ்ந்து பாடிடுவோம்
புகழ்ந்து பாடிடுவோம் - 2
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா - 2
எங்கள் தேவன் உங்கள் தேவன்
நம்ம தேவன் இயேசு ராஜன் - 2
பாவம் போக்கி சாபம் நீக்கி
பரிசுத்தமாக்கிடவே - 2
மகா ராஜன் இயேசு
நமக்காக பிறந்தாரே 2 - நம்
2. அன்பின் தேவன் பண்பின் தேவன்
நட்பின் தேவன் இயேசு ராஜன் - 2
வாழ்வு தந்து வாழவைத்து - 2
நம்மை வழி நடத்திடவே
மா மன்னன் இயேசு
நமக்காக பிறந்தாரே - 2 - புது
3. வல்ல தேவன் நல்லதேவன்
உண்மை தேவன் இயேசு ராஜன் - 2
உன்னை மீட்க என்னை மீட்க
தன்னுயிரை தந்திடவே
மகா பிரபு இயேசு
நமக்காக பிறந்தாரே - 2