துதிப் பாடல்கள்

பலி பீடத்தில் வைத்தேன்

Pali Peedathil Vaithen

பலி பீடத்தில் வைத்தேன்

என்னை பாவி என்னை

ஏற்றுக் கொள்ளும்

நிலையில்லா இந்த பூவுலகில்

நித்தம் உம் பாதையிலே

நின் சித்தம் போம் உம் கரத்தால் - 2

நித்தம் வழி நடத்தும் - 2

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில்

பரிசுத்தமாய் ஜீவிக்க

பரிசுத்தமான உம் இரத்தத்தால் - 2

பரிசுத்தமாக்கி விடும் - 2

வாலிப நாட்களில் வாஞ்சையுடன்

வந்தேன் உன் திருப்பாதம்

வாருமையா வந்து என்னை - 2

வல்லமையால் நிரப்பும்- 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு