பாவியான என் மீது கிருபையாயிரும்
பாவி எந்தன் பாவங்களை மன்னித்தருளும்
நீர் மன்னித்தால் நினைப்பது இல்லை - 2
மனிதன் மன்னித்தால் மறப்பது இல்லை - 2
இறக்கத்திலே ஐஸ்வரியம் நிறைந்தவர் நீரே
மனமிறங்கி மன்னிப்பதில் தயை பெருத்தவரே - ஆ . . ஆ . .
என்னுடைய பாவங்களை நீக்குகின்றவரே - 2
தம் கிருபையினால் தினமும் என்னை தாங்குகின்றவரே
தயவு கொண்டவரே - நீர்
உள்ளம் உடைந்து ஜெபித்த அந்த தாவீதை மன்னித்தீர்
மனங்கசந்து கதறியழுத பேதுருவை மன்னித்தீர்
கள்ளனையும் கருணையினால் மீட்டுகொண்டவரே
உம் பாதங்களில் விழுந்துவிட்டேன் என்னையும் மன்னியுமே
சேர்த்துக்கொள்ளுமே - நீர்
எத்தனையோ தவறுகளை என் வாழ்வில் செய்தேன்
அவை அத்தனையும் கண்முன் நிறுத்தி நினைவுபடுத்தினீர்
பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைவதில்லை
அதை அறிககை செய்து விட்டு விட்டால் என்றும்
துன்பமில்லை - அது நம்மை தொடர்வதில்லை - நீர்