துதிப் பாடல்கள்

பாவிக்காய் ஜீவன்

Paavikkaay Jeevan

பாவிக்காய் - ஜீவன் விட்டீர் என் இயேசு தேவா - 2

துடிதுடித்து வேதனையுற்று - 2

ஜீவன் விட்டீரே கல்வாரிக் குருசில் பாவிகட்கா - 2

தூய இரத்தம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2

இயேசுவின் இரத்தம் பாவங்கள் நீக்கி - 2

சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கும் - 2

தூய மாம்சம் - தீயருக்காய்த் - தாமே கொடுத்தீர் - 2

தூய சரீரமதைத் துரோகிகட்காய் - 2

தூயரே உம் மா அன்பால் ஈந்தீரே - 2

தூய்மையாக்கும் - தூய ஆவி - தூயரே ஈந்தீர் - 2

சத்திய ஆவியாம் தேற்றரவாளனே - 2

சத்தியத்திற்குள் நடத்திடும் தேவனே - 2

பரிந்து பேசும் - பரிசுத்த - ஆவியானவரே - 2

பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் - 2

திரியேக தேவனே உமக்கென்றும் ஸ்தோத்திரம் - 2

பரிசுத்தர் - பரிசுத்தர் - பரிசுத்தர் என்று - 2

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் என்று - 2

ஓயாமல் போற்றப்படும் என் தேவனே - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு