துதிப் பாடல்கள்

பாட்டு ஒன்னு பாடப்போறேன்

Paattu Onnu Paadapporen

பாட்டு ஒன்னு பாடப்போறேன் அண்ணாச்சி கேளு

நல்ல சங்கதியை சொல்லப்போறேன் தங்கச்சி கேளு

ஓ கின்னம்மா கண்ணம்மா பொன்னம்மா செல்லம்மா

கொஞ்ச நேரம் நிண்ணு கேளு சின்னத்தம்பி பெரியதம்பி

நல்லத்தம்பி செல்லத்தம்பி சொல்லறதை கொஞ்சம் கேளு . ஓ

முத்தம்மா முனியம்மா எதிர்விட்டு எல்லம்மா

கொஞ்ச நேரம் நின்னு கேளு ஓ

சின்னதம்பி பெரியதம்பி என்னோட தங்க தம்பி

சொல்லுறதை கொஞ்சம் கேளு

இரவும் பகலும் பாடாய்பட்டு மாடாய் நீயும் உழைக்கிற

கையில் கிடைக்கும் காச வச்சி சாராயத்த குடிக்கிற

உன்ன நம்பி மனைவி பிள்ளை காத்து கெடக்குது

ஒருவேளை சோத்துக்காக ஏங்கி தவிக்குது

ஊரே உன்னை வெறுக்குது உன்மானம் காத்துல பறக்குது

உலகமொரு நாடகமேடை வாழ்க்கை ஒரு வாடகை வீடு

நீயும் நானும் அதிலே இங்கு தினமு நடிக்கிறோம்

வேஷம் கலைந்து ஓய்வு எடுக்க கடந்து போகிறோம்

இத நீ கொஞ்சம் சிந்திக்கணும் நான் சொன்னதுல

தப்பிருந்தா மன்னிக்கணும்

ஒவ்வொரு நாளும் பாவம் செய்து மரணத்தை நோக்கி ஓடுற

பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை மறந்தே மண்ணில் வாழுற

உன்னை மீட்க இயேசு அன்று பாவமானாரு

உனக்காக ஜீவன் தந்து உயிர்த்தெழுந்தாரு

இயேசுவ நீயும் நம்பிடணும் - அவர்

பாதத்தை அன்பாய் அண்டிடணும்

தாங்டதத்த தரிகிடதத்த தளாங்குதத்த தரிகிடதோம் - 2

தகிட தகிட தகதிமி தரிகிட தோம் . . . ஓ . . - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு