பாடுகள் வழியாய் பயணம் செய்தாலும்
பரமன் இயேசுவின் பாசம் உள்ளது
சோர்ந்து போவதில்லை - நாங்கள்
வீழ்ந்து போவதில்லை
நெருக்கப்பட்டும் ஓ நாங்கள் ஒடுங்கி போவதில்லை
கலக்கப்பட்டும் மனம் முறிந்து போவதில்லை
எதிர்க்கும் சேனையை துரத்தும் தேவன்
இருக்க பயமில்லை
இயேசுவின் சிந்தையில் வாழும் எனக்கு
தோல்வி பயமில்லை
தோல்வி எனக்கில்லை
அடைக்கப்பட்டும் ஓ நாங்கள் அழிந்து போவதில்லை
குறைக்கப்பட்டும் மனம் முறுமுறுப்பதில்லை
வானம் திறந்து பொழியும் தேவன் இருக்க பயமில்லை
வானவர் இயேசு வாழ்வினில் வந்தார்
தோல்வி பயமில்லை
தோல்வி எனக்கில்லை
கைவிடப்பட்டும் ஓ நாங்கள் கலங்கி நிற்பதில்லை
ஒதுக்கப்பட்டும் நாங்கள் ஓய்ந்து விடவில்லை
சிலுவையின் வழியில் ஜெயம் தந்த தேவன் இருக்க பயமில்லை
மூன்றாம் நாளில் உயிருடன் எழுந்தார்
தோல்வி பயமில்லை
தோல்வி நமக்கில்லை