பாடுகள் என்னை பாடு படுத்தினாலும் வறுமை
என்னை வாட்டி வதைத்தாலும்-2
துன்பம் என்னை சூழ்ந்து கொண்டாலும்
கலங்காமல் நன்றி சொல்லுவேன்
நான் கர்த்தரிடம் அன்பு கூறுவேன்-கலங்காமல்-2
துன்பம் இல்லாத வாழ்க்கை
எனக்கு இன்பத்தை என்றும் தந்திடுமா-2
கண்ணீர் சிந்தாத வாழ்க்கை என்றும்
பிறரின் கண்ணீரை துடைத்திடுமா-2
பிறரின் கண்ணீரைத் துடைத்திடுமா
அவமானம் இல்லாத வாழ்க்கை
என்னை அலங்காரமாய் வைக்குமா-2
நிந்தை இல்லாத வாழ்க்கை எனக்கு
நிம்மதியை தந்திடுமா-2நிம்மதியை தந்திடுமா
உபத்திரம் இல்லாத வாழ்க்கை
என்னைஉருவாக்கி பார்க்குமா-2
தடைகளை எல்லாம் தாண்டிச்சென்றால்
சகலத்தையும் வெல்லலாம்-2
சகலத்தையும் வெல்லலாம்.
பாடே இல்லாத வாழ்க்கை என்னை
பரலோகம் கொண்டு போகுமா-2
சோதனை இல்லாத வாழ்க்கை என்னை
சாதனை செய்ய வைக்குமா-2
சாதனை செய்ய வைக்குமா