ஓசான்னா முழக்கம் கேட்குதம்மா
இயேசுவின் வருகை தெரியுதம்மா
ஒருமுறை அவர் வந்தார் நம்மை மீட்பதற்கு
மறுமுறை அவர் வருவார் நம்மை அழைத்து செல்வதற்கு
ஓசான்னா...ஓசான்னா...ஓசான்னா...
அதிசயம் ஆயிரம் நடக்குதம்மா - அது
ஆண்டவர் வருகையை பேசுதம்மா
அடிமை வாழ்வினி போதுமம்மா - அவர்
ஆட்சியில் மகிழ்ந்து வாழ்வோமம்மா
விண்ணொளி வானில் தோன்றுமம்மா - அன்று
விண்ணவர் கூட்டம் திரளுமம்மா
சாத்தானின் ஆட்சி விழுந்ததம்மா - அன்று
சத்தியமே நின்று ஜெயித்ததம்மா
ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியம்மா - இயேசு
அரசுக்கு முடிவே இல்லையம்மா
பரிசுத்தர் இயேசு உன் அரசரம்மா - அவர்
அரசுக்குள் வாழ நீ ஆயத்தமா ?