துதிப் பாடல்கள்

ஒரு சின்ன பிள்ளைபோல்

Oru Sinna Pillaibol

ஒரு சின்ன பிள்ளைபோல்

நான் ஏங்குகின்றேன்

உன் தோள்மீது சாய்ந்திடவே

ஒரு செல்லப் பிள்ளைபோல்

நான் தவித்து நின்றேன்

உம் மடிமீது தவழ்ந்திடவே

1.கண்ணில் காணும் காட்சி எல்லாம்

கானல் நீர் தானே

கண்மணி போல் காக்கும் தெய்வம்

அப்பா நீர்தானே

நாளும் மாறும் உலகின் வேஷம்

மாறி போகும் உறவு பாசம்

இயேசுவே உம் நேசம் என்றும் மாறாதையா

2.சொந்தம் என்று சொன்னவுடன்

நெஞ்சில் வந்தீரே

அதில் வந்து நிற்கும் பந்தம் பாசம்

எல்லாம் நீர்தானே

உள்ளமெல்லாம் பொங்குதய்யா

கல்லம் எல்லாம் நீங்குதய்யா

செல்லமாக உம் பெயரை (இயேசு என்று)

நெஞ்சில் சொல்வதால்

3.வாழ்க்கை என்னும் பயணத்தில்

வந்த தீபமே

தீபச்சுடரில் தெரிவது அப்பா

பாதச்சுவடுகளே

சாரதியாய் வந்தவரே

சாதகமாய் நின்றவரே

சாகும்வரை சங்கீதங்கள்

நான் பாடுவேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு