ஒண்ணும் ஒண்ணும் மூணுன்னு சொன்னேன்
ஒண்ணு விடாம எதிர்த்து நின்னேன்
கண்ணு மண்ணு தெரியாம வாழ்ந்தேன்
கண்டு பிடிச்சீங்களே-சும்மா
கண்ணாமூச்சு ஆட்டம் போட்டேன்
கட்டி பிடிச்சீங்களே
விரும்பினபடி குறும்பு செஞ்சேன்
திரும்பத் திரும்ப மறுதலிச்சேன்-2
அசுத்தத்துல புரண்டு புரண்டு
அச்சத்தில மருண்டு மருண்டு-2
திசைக்கொரு பக்கம் ஓடித்திரிஞ்சேன்
விட்டு பிடிச்சீங்களே-என்
திமிரெடுத்த நினைப்பையெல்லாம்
புட்டு ஒடைச்சீங்களே
கண்டபடி கண்ண அலையவிட்டேன்
கண்டதையெல்லாம் நம்பித் தொலைச்சேன்-2
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி
தெண்டமா ஒரு ஜீவனம் பண்ணி-2
இஷ்டத்துக்கும் வாழ்ந்த என்மேல்;
இஷ்டப் பட்டீங்க-என்
நஷ்டத்தையெல்லாம் ஈடு கட்ட
கஷ்டப் பட்டீங்க
குத்தம் குறைக்கே முக்கியம்; கொடுத்தேன்
மொத்தத்துல என் புத்தியைக் கெடுத்தேன்-2
அத்துமீறிக்கூட ஆசை புடிச்சு
உத்தமனாட்டும் நடிச்சு நடிச்சு-2
உதவாக்கறையான எனக்கு
உதவி செஞ்சீங்க
இந்த ரெண்டுங்கெட்டானையும் கூட
தெளிய வச்சீங்க