துதிப் பாடல்கள்

ஒன்றாக சேர்ந்து நாங்கள்

Ondraaga Serndhu Naangal

ஒன்றாக சேர்ந்து நாங்கள்

ஜெபிக்கும் இந்த நேரத்திலே

எங்கள் ஜெபம் கேட்பவரே-2

கண்ணீரும் கஷ்டங்களும்

சந்தோஷமாய் மாறிவிடும்

இயேசுவை துதித்துவிட்டாலே-2

ஆ..ஆ..அ...அ...ஆ..ஆ...அ..அ...

மனதாலே இப்போ ஜெபித்தாலே

நம்ம பாரங்கள் எல்லாம் பறந்தோடுமே-2

விசுவாசத்தோடு நினைச்சாலே போதும்

சந்தோஷம் வந்து இறங்கிடுமே-2

1.பாவங்கள் எல்லாமே நீங்கிவிடும்

அந்த பரலோக ராஜ்ஜியம் இறங்கிவரும்-2

பலநூறு அற்புதங்கள் அரங்கேறும்

நம்ம ஆசைகளும் தேவைகளும் நிறைவேறும்-2

கர்த்தரால் ஆகாத காரியங்கள் ஏதுமில்லை

எல்லாமே செய்திடுவாரு-2

தேடினால் கிடைக்காத செல்வங்களும் ஒன்றுமில்லை

தேவைகள் தந்திடுவாரு-2

2.அபிஷேக தைலத்தால் நிறைப்பாரு

என் கேள்விக்கு பதிலாக வந்திடுவாரு-2

புது வல்லமை அக்கினி ஊற்றிடுவாரு

என் உயிரோடு உயிராக கலந்துவிட்டாரு-2

என் வீட்டின் காலைதோரும் சந்தோஷம் எல்லாமே

அவரே தந்துவிட்டாரே-2

சொந்தங்கள் என் வாழ்வை உயர்வாக

இயேசு மாற்றிவிட்டாரு-2

வாருமே இயேசுவே வாருமே-4

இரங்குமே எங்களுக்கு இரங்குமே-4

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு