ஓடி ஜெயித்தோர் கூட்டத்திலே
நானும் சேர்ந்து விட்டேன்
ஓடி ஜெயித்திட என்னை நானே
உமக்கே தந்து விட்டேன்
ஓடுகிறேன் உமக்காக
சொல்லிடுவேன் சுவிசேஷம்- (2)
1. துன்பத்தை கண்டு நானும்
சோர்ந்து போகமாட்டேன்
இன்பத்தை கண்டு நானும்
ஏமாந்து போகமாட்டேன்
2. நெருங்கி நிற்கும் பாவங்களை
உதறி தள்ளிவிட்டேன்
நியமித்த ஓட்டத்தில்
தொடர்ந்து ஓடுகிறேன்
3. சரீரத்தை ஒடுக்கி நான்
தினமும் ஓடுகிறேன்
அழிவில்லா கிரீடத்தை
பெற்றுக் கொள்வேனே