ஓ ராஜா இயேசு ராஜா
சாரோனில் நீர் ரோஜா... - 2
உம்மை நான் துதிப்பேன்
உம்மை நான் புகழ்வேன்... - 2
நீர் எந்தன் மேய்பர்
நான் உந்தன் மந்தை... - 2 (ஓ ராஜா...)
தேடுகிறேன் நான் நித்தம் உம்மை
பாடுகிறேன் நான் உம்புகழை... - 2
பாருமே இந்த உம் ஏழையினை
வாருமே எந்தன் உள்ளத்திலே... - 2
உலகம் என்னை வெறுத்தாலும்
உறவுகள் எல்லாம் பகைத்தாலும்... - 2
ஒரு நாளும் நான் உம்மை மறந்திடேன்
உம்மை நான் என்றும் பின் தொடர்வேன்... - 2
உலகமெல்லாம் சென்றிடவேண்டும்
உம் பணியை தினம் செய்திட வேண்டும்... - 2
ஆத்தும பாரம் தந்ததினால்
ஆத்தும அறு வடை செய்துடுவேன்... - 2