நிரப்பும் என்னை நிரப்பும்
உந்தன் வல்லமையால் என்னை நிரப்பும்
பயன்படுத்தும் உந்தன் கரத்தில்
உம் சேவைக்கென்றே பயன்படுத்தும்-2
ஜீவத்தண்ணீரே எங்கள் ஆவியானவரே
நிரப்பிடுமே இந்த வேளையில்-2 - நிரப்பும்
1.ஆவியின் வரங்கள் தாருமே
ஆவியின் கனிகள் வேண்டுமே -2
அக்கினியாய் எழும்பி ஜொலித்திட
ஆவியானவரே என்னை நிரப்புமே -2 - ஜீவத்தண்ணீரே
2. உண்மையாய் ஊழியம் செய்திட
உமக்காக எங்கும் ஓடிட -2
உன் நாமத்தை என்றும் உயர்த்திட
உம் உன்னத ஆவியை ஊற்றுமே -2 -ஜீவத்தண்ணீரே
3.பரிசுத்தமாய் நான் வாழ்ந்திட
பரிசுத்த ஆவியை தாருமே -2
பரனே உந்தன் அருள் தந்து
இந்த பாரினிலே என்னை நடத்துமே -2 - ஜீவத்தண்ணீரே