நெருங்கிய உறவும் நெருக்கத்தின் நேரத்தில்
என்னை மறந்தனரே எனக்கு மறைந்தனரே
ஆறுதல் கூறிட அன்பு கூர்ந்திட
என்மேல் மனதுருகி நிற்பவரே
நீரே நிரந்தரம் –(4)
சேற்றை போலவே நாற்றமாய் இருந்தேன்
எதற்கும் உதவாமல் நான் இருந்தேன்
உம் இரத்தம் ஊற்றி என்னையும் கழுவி
உம் சொந்த பிள்ளையாய் மாற்றினீரே
பெருமையில் சிலரும் வெறுமையில் பலரும்
இழிவாய் தினமும் பேசினரே
தாழ்மையில் கிடந்த என்னிடம் வந்தீர்
தயவாய் என்னை உயர்த்தினீரே