துதிப் பாடல்கள்

நெருக்கமான நேரத்தில்

Nerukkamaana Nerathil

நெருக்கமான நேரத்தில் நெகிழ்ந்து நின்ற என்னுள்

நெருங்கி வந்து உதவி செய்யும்

உம்மை போல் வேறு யாருண்டையா (2) என் இயேசையா (2)

உம்மைப்போல் வேறு யாருண்டையா -என் இயேசையா (2)

உம்மை போல் வேறு யார் உண்டையா

1. கரை சேர்வேனோ என்று கலங்கிய போது

கட்டி தழுவி ஆதரவாய் ஓடி வந்தீரையா (2)

என் கலக்கம் நீக்கி தேற்றி விட்டீரே என் இயேசையா

உமக்கு ஈடு வேறு யார் உண்டையா (2)

2. இக்கட்டு சூழ்ந்து நிலை குலைந்த போது

கிருபையின் தேவன் விடுவித்து காத்தீரையா (2)

என் மேல் இரக்கம் காட்டி மீட்டுக்கொண்டீரே (நன்றி ஐயா) (2)

உமக்கு ஈடு வேறு யார் உண்டையா (2) - நெருக்கமான

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு