துதிப் பாடல்கள்

நெஞ்சுருக என்னை அணைத்து

Nenjuruga Ennai Anaithu

நெஞ்சுருக என்னை அணைத்து

நெடுந்தூரம் கையைப்பிடித்து

தாயைப்போல தூக்கி எடுத்து

தந்தையாய் எனக்கு புத்தி சொல்லும்

எங்க இயேசவைப் போல யாருமில்ல

அவர் உங்களுக்கும் ரொம்ப தூரமில்ல-2

காலைதோறும் என்னை எழுப்பி

கற்றுக் கொள்ளக்கவனிக்கச் செய்து

கண்ணு காதெல்லாம் திறந்து வச்சு

கல்விமானின் நாவைத் தந்த

என் ஆலோசனைக் கர்த்தர் இயேசு இருக்க

துர் ஆலோசனையெல்லாம் தூரமிருக்கும்-2

வெட்டவெளியில கண்டுபிடித்தென்னை

வெட்டியாக விட்டு விடாமல்

வெறுமையெல்லாம் நிரப்பி நல்லா

என் வேலை செய்யுன்னு அனுப்பினவர்

எஜமான்இயேசுவுக்காய் நான் ஓடுறேங்க

அவர் ராஜ்யமும் நீதியும் தேடுறேங்க-2

ஓநாய் கூட்டத்து மத்தியில

உள்ளே நுழைஞ்சேன் ஒத்தையில

வீணாய் நானும் போகக்கூடாதுன்னு

தானாய் வந்து தைரியம் கொடுக்கும்

இயேசு இருக்கையில பயமுமில்ல

நான் எப்பொழுதும் இயேசுவுக்கு பயந்தபுள்ள-2

பரத்துக்கென்னை சொந்தமாக்க

பணயம் வச்சாரு தன் உயிரை

ஜீவன் எனக்கு தந்ததுமல்லாமல்

தயவும் பாராட்டி தகுதிப்படுத்தும்

என் இயேசுவுக்காய் எங்கும் போவேனுங்க

இன்னும் நீசனும் அற்பனும் ஆவேனுங்க-2

பட்டும் படாம வாழ்ந்திருந்தேன்

பாக்குறதெல்லாம் ஆசப்பட்டேன்

கேக்குறதெல்லாம் கிடைக்குன்னு கேள்விப்பட்டும்

சாக்குபோக்கு சொல்லி தப்பிக்க நினச்ச

என் இருதயத்த இயேசப்பா கேட்டாருங்க

அவர் பிடிச்சார்னா விட்டுவிட மாட்டாருங்க-2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு