துதிப் பாடல்கள்

நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே

Neerae Neerae Ennai Kaanbavar Neerdhaanae

நீரே நீரே என்னை காண்பவர் நீர்தானே

ஆண்டவரே உம் சித்தம் போல்

ஆயுள் வரை நான் வாழ்ந்திடவே

உம் கிருபை என்னில் பொழிந்திடட்டும்

உம் வெளிச்சம் என்னில் நிலைப்பெறட்டும்

1. கலங்கின நேரம் என்னை கனிவோடு அன்பாய் காத்து

உறைவிடம் தந்தது நீரன்றோ

என்றும் உமக்காக வாழ்வது உயர்வன்றோ

உம்மாலே வாழ்கிறான்

உம்மோடு வாழ்கிறான்

2. ஆதரவின்றி எங்கோ அழைந்தேன்

அடைக்கலம் கொடுத்தென்னை காத்து

உம் நீதியின் பாதையில் நடத்துகின்றீர்

உம் சாயலில் என்னை உருமாற்றினீர்

என் பாரத்தை நீர் சுமந்தீர்

நான் பாக்கியம் காண செய்தீர்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு