துதிப் பாடல்கள்

நீரே எனக்கு எல்லாமுமான

Neerae Enakku Ellaamumaana

நீரே எனக்கு எல்லாமுமான எங்களின் அன்பு பிதா

ஐயா நீரே எனக்கு எல்லாமுமான

எங்களின் அன்பு பிதா

நீர் படைத்த சிருஷ்டிகள் ஒவ்வொன்றும் அழகு

நல்லதென்று நீர் கண்டீர்

உம் சாயலில் உருவான மனிதற்கு மட்டும்

அதிகமாய் இரங்குகிறீர்

வல்லமையின் உருவே வாக்குத்தத்த குருவே

வரமொன்றைத் தாருமைய்யா

ஆவியின் கனிகள் அத்தனையும் மொத்தமாய்

அமைந்திட வேண்டுமைய்யா

என் ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்

உமக்கென்று ஒப்புக்கொடுத்தேன்

என் மனதும் உணர்வும் சித்தமுடன்

ஜீவ பலியாக தந்துவிட்டேன்

பரிசுத்தமாக்கும் பரலோக தேவா

உம் பாதத்தில் சரணம் ஐயா

என் பாவங்கள் துடைத்திட்ட பரமனே

உந்தன் பக்கத்தில் வரணும் ஐயா

ஒரு கணப்பொழுதும் மனம் சிதறாமல்

நான் கண்மூடி இருந்தாலும்

கண்ணெதிரே நின்று காட்சி கொடுப்பவர்

என் கர்த்தர் இயேசுவன்றோ

ஆவியின் கண்களை திறந்திட்ட

தேவனின் அற்புத தரிசனமே

நான் அடைந்திட்ட இன்பமும் அளவில்லா

மகிமையும் ஆனந்த குதூகலமே

ஒரு குறையில்லா வாழ்வினை நிறைவோடு

தந்திட்ட நேசரின் சந்நிதியில்

நான் நித்தமும் அம்ர்ந்து, நிம்மதி அடைந்து,

நித்திய சுகம் பெறுவேன்

இரு விழி ஓரத்தில் வழிகிற

நீரும் ஆனந்த கண்ணீரே

இந்த பாவியைக்கூட நேசிக்கும்

தேவனின் அன்பினைக் கண்டேனே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு