நீரே என் சொந்தம் ஐயா
நீரே என் தஞ்சம் ஐயா
உம்மை நான் துதி பாடுவேன் - 2
நீரே என் வாஞ்சை ஐயா
நீரே என் தாகம் ஐயா
உம்மை நான் ஆராதிப்பேன்
1. என்னுடைய உள்ளத்திலே இருப்பவரும்
நீங்க தான்
என்னுடைய இருதயத்தை ஆள்பவரும்
நீங்கதான்
உம்மை நான் துதி பாடுவேன் - 2
உம்மை நான் ஆராதிப்பேன் - 2
2. என்னுடைய ஆசை நீங்க
என்கூடவே இருக்கணும்
என்னுடைய வாஞ்சை நீங்க
என்னை தினம் நடத்தனும்
3. என்னுடைய தாகம்
உங்க ராஜ்யத்திலே சேரனும்
என்னுடைய தவிப்பு நான்
உங்க முகம் பார்க்கனும்