துதிப் பாடல்கள்

நீரே என் இராஜா

Neerae En Iraajaa

நீரே என் இராஜா

நீரே என் ரோஜா

நீரே என் ஜீவன் அன்றோ - 2

பாச கரம் நீட்டி என்னை தெரிந்தெடுத்தீர்

நேசக்கரம் நீட்டி என்னை மீட்டெடுத்தீர்

உந்தன் அன்புக்கு ஈடாக நானும்

என்ன செய்திடுவேன் என்னையே தந்திடுவேன்

தேவா உந்தன் கரத்தினில் என்னை கொடுத்தேன்

ஏற்றுக் கொண்டு தினமும் நடத்திடுமே

கண்ணின் மணிபோல காத்திடும் தெய்வம்

நீரே இயேசு ராஜா நீரே இயேசு ராஜா

அன்பே அன்பே என்று புகழ்ந்திடுவேன்

என்றும் போல இன்றும் காத்து நடத்திடுமே

தாயினும் மேலாக தேற்றிடும்

அன்பு உந்தனின் அன்பு அல்லவா

கல்வாரி அன்பு அல்லவா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு