நீர் சொல்ல ஆகும்
நீர் கட்டளையிட நிற்கும்
உம் ஒரே ஒரு வார்த்தையிலே
அதிகாரம் உண்டு
உம் ஒரே ஒரு வார்த்தையாலே
வல்லமை உண்டு
புயலை பார்த்து சொன்னீரே அடங்கு என்று
உம் ஒரே ஒரு வார்த்தையாலே அது
அடங்கிப்போனதே
என் வாழ்வில் வீசுகின்ற புயலும் கூட
உம் ஒரே ஒரு வார்த்தையிலே அது அடங்கிபோகுமே
லாசருவே வெளியே வா என்று சொன்னீரே
உம் ஒரே ஒரு வார்த்தையிலே உயிரோடு வந்தானே
உலர்ந்துபோன எலும்புகளும் எழும்பி நின்றதே
என் வாழ்வையும் காலூன்றி நிற்க செய்வீரே
ஒன்றுமே இல்லாத சூழ்நிலையிலும்
உம் ஒரே ஒரு வார்த்தையிலே எல்லாம் உண்டானதே
உம் வார்த்தையாலே அசுத்த ஆவி நடுங்கி ஓடுமே
எல்லாவித நோய்களும் சுகமாகுமே