நீர் செய்த நன்மைகள் நினைத்து
நினைத்து பார்க்கின்றேன்
நெஞ்சம் மகிழுகிறேன் தேவா
தஞ்சம் புகுந்திடுவேன்
ஆபிரகாமிலும் நல்ல தகப்பன்
என்னை நீர் அறிவீர்
எந்தன் தேவைகள் இன்னதென்று
அறிந்து செயல்படுவீர்
என் தேவனே என் தகப்பனே
நன்றி சொல்லுவேன் உம்மை நம்புவேன்
காலமே எழுந்திடுவேன்
கர்த்தரை துதித்திடுவேன் - தினமும்
தஞ்சம் புகுந்திடுவேன்
துன்ப வேளையில் எதிரி நெருக்கையில்
அருகில் நீர் வருவீர்
உந்தன் சார்பினில் விழுந்து விடுவேன்
எனக்காய் உயிர் கொடுத்தீ ர்
எந்தன் கண்ணீர் எந்தன் அலைச்சல்கள்
என்னவென்றறிவீர்
நீதி தேவன் மறப்பதில்லை
பலனை கொடுக்கின்றீர்