துதிப் பாடல்கள்

நீர் போதும் தேவா நீர் போதுமே

Neer Podhum Devaa Neer Podhumae

நீர் போதும் தேவா நீர் போதுமே

உந்தன் சமூகம் வேண்டுமே-2

உம்மை அல்லாமல் யாருண்டு எனக்கு

நீர் போதும் நீர் போதும் நீரே போதும்.

ஆகாரை போல் திரிந்தலைந்தேன்

அழுதேன் புரண்டேன் ஒருவரில்லை -2

உம்மையன்றி ஒருவருண்டோ

இப்புவியில் என் தெய்வமே -2

நீர் போதும் நீர் போதும் நீரே போதும்.

துக்கத்தில் பிறந்த யாபேசை போல்

எதிர்காலம் இன்றி ஏமாந்து போனேன் -2

உம்மை நம்பி ஓடிவந்தேன் ஆதரித்தீரே என் இயேசுவே -2

நீர் போதும் நீர் போதும் நீர்போதுமே

யாக்கோபைப் போல் காரிருள் நேரத்தில்

தனிமையில் அகப்பட்டு தவித்தபோது -2

கைவிடா நேசர் நீர் என்னோடே

கவலையில்லை இப்புவியில் - 2

நீர் போதும் நீர் போதும் நீர் போதுமே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு