நீ அஞ்சாதே திகையாதே
கலங்காதே நடுங்காதே
மன்னன் இயேசு உன்னில் இருக்கிறார் - 2
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2
பர்வதங்கள் பெயர்ந்து போகலாம்
குன்று கூட அசைந்து போகலாம்
அன்பு கொண்ட எந்தன் நேசரின் - 2
அன்பின் உள்ளம் அசைவதில்லை
உன்னை விட்டு பிரிவதில்லை
உன்னை என்றும் மறப்பதில்லையே
பெற்ற தாயும் மறந்து போகலாம்
சொந்த பந்தம் அறுந்து போகலாம்
அன்பு கொண்ட எந்தன் இயேசுவின் - 2
அன்பின் உள்ளம் அசைவதில்லை
உன்னை விட்டு பிரிவதில்லை
உன்னை என்றும் மறப்பதில்லையே