நட்சத்திரம் வானிலே கண்டேன் கண்டேன்
அது விசித்திர கதை சொல்லக் கேட்டேன் கேட்டேன் --(2)
ரட்சகர் இயேசுவின் பாதம் பணிந்து
பொன் வெள்ளை போளமும் தந்தேன் தந்தேன் --(2)
மந்தையை ராவினில் காத்தேன் காத்தேன் நான்
விந்தையாய் தூதர்கள் தோன்றக்கண்டேன் --(2)
சிந்தையை கவர்ந்த சுந்தர பாலனை
பெத்லகேம் ஊர் சென்று பார்த்தேன் பார்த்தேன் --(2)
சாலேமின் மீட்புக்காய் காத்திருந்தேன் நான்
ஆலயத்தில் அவரைக் காணப் பெற்றேன் --(2)
தேவகுமாரனை கைகளில் ஏந்தி
மா சமாதானமும் பெற்றேன் பெற்றேன் --(2)