நன்றியால் உள்ளம் நிரம்பி வழியுது
நன்மை செய்த இயேசுவை பாட சொல்லுது (2)
1.பாதை தடுமாறி பதறி போனேனே
கிருபையால் என்னை தாண்ட செய்தீரே
தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே
நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே (2)- நன்றி
2.அடுத்தவரை பார்த்து அமிழ்ந்து போனேனே
அப்பா என்னைப் பார்த்து அணைத்து கொண்டீரே (2)
அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே
தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே (2) - நன்றி
3.நிந்தனையால் நித்தம் நிலைகுலைந்தேனே
நீதி செய்து தலையை நிமிர வைத்தீரே (2)
நிமிர வைத்தீரே தூக்கி விட்டீரே
தாண்ட செய்தீரே அணைத்து கொண்டீரே (2) - நன்றி
4.பிரச்சனையைக் கண்டு கலங்கி நின்றேனே
கரத்தை நீட்டி என்னை தூக்கி விட்டீரே (2)
தூக்கி விட்டீரே தாண்ட செய்தீரே
அணைத்து கொண்டீரே நிமிர வைத்தீரே (2) - நன்றி