நன்றி சொல்லி துதிப்பேன் - இயேசுவை
நன்றி சொல்லி துதிப்பேன்
அவர் செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லி சொல்லி துதிப்பேன்
துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே
துதிகன மகிமையெல்லாம்
அவர்க்கே செலுத்துகிறேன்
வியாதியில் பரிகாரி வறுமையில் உபகாரி
உடல் பொருள் ஆவிக்கெல்லாம்
இயேசுவே அதிகாரி
ஊழியம் தந்தவரே ஊதியம் தந்திடுவார்
என் உழைப்பை கணக்கில் வைத்து
உயர்த்தி மகிழ்ந்திடுவார்