துதிப் பாடல்கள்

நன்றி சொல்ல வார்த்தை

Nandri Solla Vaarthai

நன்றி சொல்ல வார்த்தை இன்றி தவிக்கின்றேன் ஐயா

என் இதயத்தையே உமக்கு நன்றியாய் படைக்கின்றேன்

நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி நன்றி நன்றி ஐயா

எதிர்த்து வந்த செங்கடலை பிளந்தீர் நன்றி ஐயா

எழும்பி நின்ற எரிகோவை உடைத்தீர் நன்றி ஐயா

தாவீதினால் கோலியாத்தை மடியச் செய்தீர் ஐயா

இயேசு என்னும் நாமத்தினால் விடுதலை தந்தீர் ஐயா

எலியாவை மரணமின்று எடுத்துக்கொண்டீர் ஐயா

எலிசாவை இரு மடங்காய் அபிஷேகம் செய்தீர் ஐயா

தானியேலை சிங்கக் குகையில் விடுவித்தீர் ஐயா

தாங்கி எம்மை வழிநடத்தி வருவதால் நன்றி ஐயா

துன்பங்களை துயரங்களை துடைத்தீர் நன்றி ஐயா

வியாதியையும் வறுமையையும் விலக்கினீர் நன்றி ஐயா

காலமெல்லாம் பாதுகாத்தீர் நன்றி ஐயா

கல்வாரி நாயகனே நன்றி நன்றி ஐயா

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு