துதிப் பாடல்கள்

நம்பிக்கையும் நீர் தானே

Nambikkaiyum Neer Thaanae

நம்பிக்கை நங்கூரம்

நான் நம்பும் தேவனே

நம்பினோரை காக்கும் இயேசுவே

பரம பரிசுத்த தேவனை

பரலோக ராஜனை

பாடல் பாடி கொண்டாடிடுவோம்

நம்பிக்கையும் நீர் தானே

நங்கூரமும் நீர் தானே

நாங்கள் நம்பும் தேவன் நீர் தானே -2

நீர் தானே

பார்வேனை வென்றவரை

துதிப்போம் (துதிப்போம்)

எகிப்தியரை வென்றவரை

துதிப்போம் (துதிப்போம்)

ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும்

எகிப்தியர் வந்தாலும்

பாடல் பாடி முன்னேறிடுவ

கன்மலையை பிளந்தவரை

துதிப்போம் (துதிப்போம்)

நீரூற்றை தந்தவரை

துதிப்போம் (துதிப்போம்)

பஞ்சம் பட்டினியே வந்தாலும்

வரட்சிகள் என்றாலும்

பாடல் பாடி முன்னேறிடுவோம்

கல்லரையை பிளந்தவரை

துதிப்போம் (துதிப்போம்)

மரணத்தை வென்றவரை

துதிப்போம் (துதிப்போம்)

மரண இருளுள்ள பள்ளத்தாக்கின்

சூழ்நிலைகள் வந்தாலும்

பயமின்றி முன்னேறிடுவோம்

சேனைகளை கவிழ்த்தவரை

துதிப்போம் (துதிப்போம்)

சத்துருவை வென்றவரை

துதிப்போம் (துதிப்போம்)

போராட்டம் தொல்லைகள் வந்தாலும்

யுத்தங்கள் நேர்ந்தாலும்

பயமின்றி முன்னேறிடுவ

என் நம்-பிக்-கை நீர் தானே

என் நங்-கூ-ரம் நீர் தானே

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு