நம்பிக்கை தெய்வம் அவர்தானே
நம்பினோரைக் கைவிடுவதில்லை-2
நம்பினோர் கைவிடப்படார்- இயேசுவை
1. நினைத்த காரியம் வாய்க்குமா என ஏங்குகின்றாயோ
நினைவையெல்லாம் அறியும் தெய்வம்
உனக்குள் இருக்கின்றார்
வேண்டியதெல்லாம் தந்திடுவார்
விருப்பமெல்லாம் நிறைவேற்றுவார்-2 எனவே
கர்த்தரைத் துதி அவரையே நம்பு-3
காரியங்கள் வாய்க்கைச் செய்வார்
கரம் பிடித்து நடத்திச் செல்வார்-2
2. மனிதர்களின் வார்த்தையால்
மனம் நொந்து போனாயோ
மறுபடியும் எழ நினைத்தும் முடியவில்லையோ
எனக்கு மட்டும் ஏன் இப்படி
என்று நினைத்து கலங்காதே-2 கர்த்தரை துதி
3. வருத்தப்பட்டு பாரம்சுமந்து
சோர்ந்து போனாயோ- உன்
வருத்தங்களை எல்லாம் பகிர்ந்துகொள்ள
யாரும் இல்லையோ
விசாரிக்கும் தெய்வம் இயேசு உண்டு
மன விசாரங்களை எல்லாம் மாற்றிடுவார்-2