நமக்காகத்தான் பிறந்தார் இயேசு - அவர்
விலை உயர்ந்த பரிசு விண்ணக பரிசு - 2
1. மனுகுலம் எதிர்பார்த்த பரிசு
மனுகுலம் மீது அன்புள்ள பரிசு - 2
கமபா... ரிகமா.. சரிகா
பம... கம.. கா..
மனுகுலம் வாழ பிறந்திட்ட பரிசு
உயர்தரம் பரிசு உயிரை தரும் பரிசு
2. நம்மை வழி நடத்தும் நல்ல பரிசு
நம்மை பரம் சேர்க்கும் பரலோக பரிசு - 2
தரிகிடதோம்.. தரிகிடதோம்.. தரிகிடதோம் ...
தரிகிட...தரிகிடதோம்
அன்பான பரிசு அழகான பரிசு
அருள் தரும் பரிசு
அறிவை ஊட்டும் பரிசு
3. எவருக்கும் கிடைக்கும் இந்த பரிசு
எவரையும் நேசிக்கும் நேசமுள்ள பரிசு-2
கமபா... ரிகமா.. சரிகா
பம... கம.. கா..
விலையேதுமில்லை தொலை தூரம் இல்லை
தொலைவது மில்லை இயேசு என்னும் பரிசு