துதிப் பாடல்கள்

நான் உன்னோடு என்றென்றும்

Naan Unnodu Endrendrum

நான் உன்னோடு என்றென்றும் இருப்பேன்

நீ மறக்கபடுவதில்லை

உன்னை நினைத்தேன் பெயர் சொல்லி அழைத்தேன்

உள்ளங்கையில் வரைந்தேன் கைவிட மாட்டேன்

பயப்படாதே நான் துணை நிற்கிறேன்

திகைத்திடாதே உன்னை சிநேகிக்கிறேன்

நானே உன் தேவன், நீ எந்தன் தாசன்

நீதியின் வலக்கரத்தால் தாங்கிடுவேன்

தண்ணீர்களை நீ கடந்திடுவாய்

அக்கினியில் நீ நடந்திடுவாய்

தண்ணீர்கள் உன்மேல் புரளுவதில்லை

அக்கினியும் உன்னை எரிப்பதில்லை

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு