நான் உந்தன் மகிமையின் பிள்ளை அல்லவா
உம்மையே நம்பி இருப்பேன்
உந்தன் வழியினில் தினம் நடந்து
ஆனந்தம் அடைந்திருப்பேன்
யாரிடத்தில் நான் போவேன் நீரே எனக்குப் பிதா
உம்மிடத்தில் உறவு வைப்பேன்
நீரே எனக்கு ராஜா உயிரும் உம்மோடுதான்
நினைவும் உம்மோடுதான் நீரும்
என்னோடு தான் நானும் உம்மோடு தான்
உம் வழியில் நடக்கையிலே எனக்கு சந்தோசமே
உன் சித்தத்தை செய்யும்போது எனக்கு நிம்மதியே
நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே
உம்பாதம் அமரும் போது எனக்கு பரவசமே
உம் வசனம் கேட்கும்போது எனக்கு ஆனந்தமே
நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே
என் இதயம் உன் குரலை தினமும் கேட்டிடுதே
உன் வருகை எதிர்நோக்கி தினமும் காத்திடுதே
நீர் எனக்கு நான் உமக்கு எல்லாமே எனக்கு நீரே