நான் தேடும் பேரின்பம் நீயல்லவா
இயேசுவே என்னில் வா
என் வாழ்வில் நீயின்றி வாழ்வேதைய்யா
எல்லாமும் நீதானய்யா - 2
பல்லாண்டு மண்மீது வாழ்ந்தாலென்ன
ஒரு நாளில் மடிவேனய்யா
பொன்னோடு பொருளோடு வாழ்ந்தாலென்ன
என்னோடு சேராதய்யா - 2
உன் பாதை ஒன்றே வழியாகினால்
என்னாளும் வாழ்வேனைய்யா - 2
உறவோர்கள் என்னை சூழ வாழ்ந்தாலென்ன
உன் அன்பிற்கு ஈடாகுமா - 2
உலகத்தை ஒரு சேர ஆண்டாலென்ன
வான் வீடு எனக்காகுமா - 2
நிலையான வாழ்வை தரும் தேவனே
அலைபாயும் உள்ளத்தில் வா - 2