நான் தனியாய் நின்றிருந்த போது
என் துணையாய் வந்தவரே
அன்பே ஆண்டவரே
என்னை நேசிக்கும் ஒருவரே - 2
ஒடுக்கப் படுகின்றபோது
என் கர்த்தர் கரத்தால் அணைத்தீர் - 2
நான் வருத்தப்படுகின்ற போது
என் வலப்பக்கத்தில் நீர் இருந்தீர் - 2
உலக கவலைகள் நெருக்க
என் உடலில் சோர்வுகள் பெருக - 2
நான் மரணபடுக்கையில் கிடந்தேன்
புது ஜீவன் தந்தவர் நீரே - 2
மனிதர்கள் என்னை மறந்தாலும் (ஐயா)
நீரோ என்னை நேசித்தீர் - 2
இந்த உடலில் உயிர் உள்ளவரையும்
உம் நாமம் பாடி மகிழ்வேன் - 2
நீரே எனது தெய்வம்
உம் வார்த்தை என்னுடைய செல்வம் - 2
உம் சமூகம் நான் தங்கும் இல்லம்
நீரே என்னுடைய சொந்தம் - 2