நான் தங்கும் உறைவிடமே
நான் நம்பும் கன்மலையே – 2
நீர் என் அடைக்கலம்
நீர் என் கோட்டை
நீர் தான் எல்லாமே – எனக்கு
நீர் தான் எல்லாமே – நான் தங்கும்
1. காற்றுக்கு ஒதுக்காக இருப்பவரே
பெருவெள்ளத்தின் புகலிடம் நீரே – 2
வறண்ட நிலத்திற்கு நீர்காலும் நீர் - 2
விடாய்த்த பூமிக்கு நிழலும் நீர் - நான் தங்கும்
2. ஏழைக்குப் பெலனாய் இருப்பவரே
எளியோர்களின் திடன் நீரே – 2
வெயிலுக்கு ஒதுங்கும் நிழலும் நீர் - 2
வெட்டாந்தரைக்கு மழையும் நீர் - நான் தங்கும்
3. மகிமையின் நம்பிக்கையாய் இருப்பவரே
மறுரூப வாழ்வை அளிப்பவர் நீரே – 2
பரிசுத்தமாக்கி மகிழ்பவர் நீர் - 2
பரலோகில் என்னை சேர்ப்பவர் நீர் - 2 – நான் தங்கும்