நான் கண்ணீரோடு விதைத்து உள்ளேன்
அதை கெம்பீரமாய் அறுத்திடுவேன் - 2
கவலை இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் எனக்கு உதவி செய்வார் - 2
1. வழியருகே நான் விதைத்திருந்தால்
மனுஷர் மிதிப்பார் பறவை வந்து
அதை பட்சித்து விடும் -2
வழியருகே நான் விதைக்கவில்லை - 2
நல்ல நிலத்தில் நான்
விதைத்து உள்ளேன்
முப்பதும் அறுபதும்
நூறுமாய் பலனெடுப்பேன் - 2
2. பாறையின் மேல் நான் விதைத்திருந்தால்
ஈரம் இல்லாததால் வெயிலடிக்க
பயிர் வாடிக் கிடக்கும் - 2
பாறையின் மேல் நான்
விதைக்கவில்லை - 2
3. முட்செடி நடுவே விதைத்திருந்தால்
முளைத்தும் வளராமல் முடங்கி விடும்
முள் முடக்கி விடும் (அதை) - 2
முட்செடி நடுவே விதைக்கவில்லை - 2