துதிப் பாடல்கள்

நான் காணாமல் போன ஆடு

Naan Kaanaamal Pona Aadu

நான் காணாமல் போன ஆடு

அன்பின் இயேசு தேடி வந்தார்

ஆணிகள் பாய்ந்த கரத்தாலே

என்னை தேற்றி அணைத்தார்

பாவங்களை கழுவி அவர்

வெள்ளை ஆடையை தந்தார்

இயேசய்யா இயேசையா

நானும் உந்தன் பிள்ளை ஆனேன்

பொருளாசை கொண்டு நான் அலைந்தேன்

பாவ வழிகளில் நடந்தேன்

நல்ல வாழ்வதனை நான் தொலைத்தேன்

மரணம் நோக்கி சென்றேன்

தனிமையில் நான் விழுந்தேன்

நீர் என்னை தேடி வந்தீர்

அழுக்கான என்னை தொட்டு

புது வாழ்வை தந்தீரே

இயேசையா இயேசையா

நானும் உம் பிள்ளை ஆனேன்

கெட்டவன் நான் நல்லவன் ஆனேன்

மரித்தவன் மீண்டும் பிறந்தேன்

இனி தொல்லை இல்லை துன்பம் இல்லை

மந்தையில் சேர்ந்தேன்

பாவ வாழ்க்கை இனியும் இல்லை

உன்னை பற்றி சொல்வேனே

ஆசீர்வாதம் நிறைவாய் பெற்றேன்

உமது அன்பை சொல்வேனே

இயேசையா இயேசையா

நானும் உம் பிள்ளை ஆனேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு