துதிப் பாடல்கள்

நாளாகிப் போனாலும் என்ன

Naalaagip Ponaalum Enna

நாளாகிப் போனாலும் என்ன

வயதாகிப் போனாலும் என்ன

அழுக்கான கந்தை அணிந்தாலும் என்ன

ஆண்டவர் உன்னையும் நேசிக்கிறாரே-2

கருப்போ சிவப்போ ஆனாலும் என்ன

கூரையில் குடிசையில் வாழந்தாலும் என்ன

பட்டம் படிப்பேதும் படிக்காமல் இன்னும்

பரதேசியாய் எங்கும் திரிந்தாலும் என்ன

சொந்தங்களும் பந்தங்களும் ஒதுக்கினாலும்

உனக்கென்று ஒரு தேவன் உன்னோடுண்டு-2

இயேசுவே எல்லாம் இயேசுவே எல்லாம்

தாயவள் கருவில் உருவாகுமுன்னே

தூயவர் உன்னைத் தெரிந்து கொண்டாரே

தன் பிள்ளையாக பிரித்தெடுத்துன்னை

ஏந்தியும் சுமந்தும் தாங்கி வந்தாரே

அன்றுமுதல் இன்றுவரை கூடேநின்று

ஒன்றும் உனை அனுகாமல் தப்புவித்தார்-2

விடுதலை தந்தார் விடுதலை தந்தார்

ஆயிரம் வருடம் அரசாட்சியில்

ஆண்டவரோடு நீ வாழ்ந்திட வேண்டும்

அவரோடு கூட உன்னதங்களில்

உன்னையும் உயிர்ப்பித்து உட்கார வைப்பார்

வானம் அது பூமி அது ஒழிந்தே போகும்

ஆனாலும் அவர்க்குள் நீ பிழைத்திருப்பாய்-2

பிழைத்திரு என்றார் பிழைத்திரு என்றார்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு