துதிப் பாடல்கள்

முத்திரை மோதிரமாய் வைப்பேன்

Muthirai Modhiramaay Vaippen

முத்திரை மோதிரமாய் வைப்பேன் என்று

வாக்கில் வல்லவர் நீர் உரைத்தீரே

ஒரு நாளும் என்னை தள்ளாதவரே

ஆராதனைக்கு பாத்திரரே - 2

வாக்கில் வல்லமை உள்ளவரே

ஆராதனைக்கு பாத்திரரே - 4

உன் னை தொடுபவன் என் கண்மணியை

தொடுபவன் என்று ஆறுதல்படுத்தி

கலங்காதே என்று தூக்கி சுமந்த

என் அப்பா இயேசுவே - 2

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிட்டேன்

எதற்குமே இனி கலங்கமாட்டேன் - 2

இதினாலே உம் பாதம் என் தஞ்சம்

என் அம்மா இயேசுவே -2

ஒவ்வொரு நாளும் என் வழிகளெல்லாம்

கூடவே வந்து பாதுகாத்தீர் -2

வாழ்க்கை எல்லாம் உம் கரத்திலே

என் மேய்ப்பர் இயேசுவே - 2

யுத்தம் உம்முடையது அல்ல

யுத்தம் எனக்குறியது என்றீர் - 2

பயப்படாதே என்றுரைத்த

என் இரட்சகர் இயேசுவே - 2

நம்பிக்கையிருந்தால் என்னிடம் திரும்பு

நன்மையை தருவேன் இன்றைக்கே தருவேன் - 2

என்று நீர் சொன்னவரே பாதம்

அமர்ந்து காத்திருக்கிறேன் – 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு