துதிப் பாடல்கள்

முந்தின சீரைப் பார்க்கிலும்

Mundhina Seeraip Paarkkilum

முந்தின சீரைப் பார்க்கிலும் நற்ச்சீர் உண்டாக்குவேன்

நீங்கள் பலுகி பெருகும்படி வர்த்திக்க பண்ணுவேன் (2)

அவமானங்கள் இனி அடைவதுமில்லை

நிந்தனைகள் இனி சுமப்பதுமில்லை (2)

நன்றி நன்றி தேவா நன்றி நன்றி ராஜா (2)

1சோதனையை யோபு ஜெயித்ததினால்

இரட்டிப்பான ஆசீர் பெற்றுக்கொண்டான் (2)

நான்கு தலைமுறைகள் கண்டு

நன்மையால் திருப்தியானான் (2) - (அவமானங்கள்)

2பொறுமையாக ரூத் இருந்ததினால்

குணசாலி ஸ்திரி என்று போற்றப்பட்டாள் (2)

நகோமியின் கசப்பை மாற்ற

ஓபேத்தை பெற்றெடுத்தாள் (2) - (அவமானங்கள்)

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு