துதிப் பாடல்கள்

மோசம் போகாதே நண்பனே

Mosam Pogaadhae Nanbanae

மோசம் போகாதே நண்பனே

இயேசுவண்டை வா - 1

மனுஷன் எதை விதைப்பானோ

அதையே அறுப்பான் - 2

1. மாம்சத்திற்க்காய் விதைத்திட்டால்

அழிவை அறுப்பாய் - 2

ஆவிக்கு என்று விதைத்திட்டால்

ஜீவனை அறுப்பாய் - 2

2. மனுஷன் பேசும் வீண் பேச்சு

ஒவ்வொன்றுக்கும் அவன் - 2

கணக்கு ஒப்புவிக்க

வேண்டுமே நியாயத்தீர்ப்பிலே - 2

3. நியாயத்தீர்ப்பில் தப்பிட நீ

இயேசுவண்டை வா - 2

இன்றே உந்தன் பாவம் நீங்கி

மன்னிப்பு அடைய வா - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு