1.மேசியாவாம் இயேசுவே மெய்யான தேவனாம் -2
மகத்துவம் நிறைந்த ஜீவதேவனாம் -2
2. மகிமையின் இயேசுவே மாறாத கர்த்தராம் -2
கிறிஸ்து இயேசுவே அன்பின் தேவனாம் -2
3. யேகோவா கர்த்தரே சேனைகளின் கர்த்தர் -2
மகா பயங்கரமான தேவாதி தேவன் -2
4. இருக்கிறவராக இருக்கிற தேவனாம் -2
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாம் -2
5. அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர் -2
நித்திய பிதா சமாதானப் பிரபுவாம் -2
6. இம்மானுவேல் நாதரே இயேசுவாம் இரட்சகர் -2
இவ் உலகை மீட்க வந்த நல்ல மீட்பர் -2
7. மீட்பர் ஒருவரே இரட்சகர் ஒருவரே -2
கர்த்தர் ஒருவரே தேவன் ஒருவரே -2
8. பிதா குமாரன் பரிசுத்த ஆவியாம் தேவன் -2
பரிசுத்தம் நீதி நிறைந்த நல்ல தேவன் -2
9. சர்வ வல்லமையும் அதிகாரமும் நிறைந்த -2
இயேசுவின் நாமமே மகா மேன்மையானது -2
10.இகத்திலும் பரத்திலும் இயேசுவின் நாமமே -2
எல்லா நாமத்திற்கும் மேலான நாமமே -2
11. ஆண்டவர் இயேசுவே ராஜாதி ராஜாவும் -2
கர்த்தாதி கர்த்தரும் ஆதி அந்தமுமானோர் -2
12.இயேசுவின் திரு நாமமதைப் பிரஸ்தாபமாக்கி -2
இயேசுவின் செயல்களைப் பிரசித்தப்படுத்துவோம் -2