துதிப் பாடல்கள்

மரணப்படுக்கையில் படுத்திருந்தேன்

Maranappadukkaiyil Paduthirundhen

மரணப்படுக்கையில் படுத்திருந்தேன்

என்னைத் தொட்டவரே

இன்னும் உயிரோடிருக்கிறேன்

நான் உயிரோடிருக்கிறேன்

ஓடி வந்து உம்மைத் தொட்டதினால்

பெரும்பாடு நின்றதே

இன்று சுகமாய் இருக்கிறேன்

உமது மகளாய் சிரிக்கிறேன்

உரத்த சத்தமாய் சத்தமிட்டேன்

என்னைக் கண்டவரே

இன்று உலகைக் காண்கிறேன்

உமது படைப்பைப் பார்க்கிறேன்

கைகால் வராமல் கிடத்தப் பட்டேன்

என்னை எழுப்பினீரே

இன்று எழுந்து நடக்கிறேன்

உம் பாதம் விழுந்து கிடக்கிறேன்

கல்லரைச் சங்கிலியால் கட்டப்பட்டேன்

கட்டவிழ்த்தவரே

இன்று புத்தி தெளிந்திருக்கிறேன்

புது வஸ்திரம் அணிந்திருக்கிறேன்

கொன்னைவாய்ச் செவிடாய் தவித்திருந்தேன்

தயை செய்தவரே

இன்று பேசித்துதிக்கிறேன்

வசனம் கேட்கத் துடிக்கிறேன்

அசுத்த ஆவியினால் அவதிப்பட்டேன்

என்னை விடுவித்தவரே

இன்று ஆராதிக்கிறேன்

உமது ஆவியில் நிறைகிறேன்

சூம்பின கையோடு சோர்ந்திருந்தேன்

என்னை சொஸ்தமாக்கினீர்

இன்று கைகளை அசைக்கிறேன்

இரு கரங்களைத் தட்டுகிறேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு