மறைவிடம் நீரே தேவா – என்
உறைவிடம் நீரே தேவா -2
சந்தோஷமும் என் சங்கீதமும்
சகலமும் நீரே தேவா -2
அடைக்கலம் நீரே தேவா – என்
ஆரோக்கியம் நீரே தேவா -2
அடைக்கலமும் என் ஆரோக்கியமும்
ஆறுதலும் நீரே தேவா -2
மருந்துகள் நீரே தேவா – என்
மருத்துவர் நீரே தேவா -2
மருந்துகளும் என் மருத்துவரும்
மகிழ்ச்சியும் நீரே தேவா -2
நல்லவர் நீரே தேவா
நல்லவர் நீரே தேவா -2
பரிசுத்தர் நீரே தேவா
என் பரிகாரி நீரே தேவா 2