துதிப் பாடல்கள்

மனுஷனாய் ஏன் அவதரித்தீர்

Manushanaay En Avadharitheer

மனுஷனாய் ஏன் அவதரித்தீர்? - இந்த

மாட்டுக் குடில் தனில் - தேவா

பரலோக தேவனே பரம பிதாவே - 2

ஆவியாயிருக்கிற அன்பின் கர்த்தரே - 2

1. ஆதியில் வார்த்தையாயிருந்தீர் - அந்த

வார்த்தையே மாமிசமானீர் - தேவா

ஆதி அந்தமில்லா ஜோதி பிதாவே - 2

வானங்களைக் கிழித்திறங்கி வந்தீரோ - 2

2. வானம் பூமி யாவும் படைத்தீர் - சர்வ

சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தீர் - இந்த

சர்வத்தையும் படைத்தாளும் தேவன் - 2

மாட்டின் முன்னணை தான் உம் படுக்கையோ - 2

3. வார்த்தையால் சர்வமும் தாங்கும் - வல்ல

வான பராபரன் இயேசு - தம்

வல்லமை நிறைந்த எங்கள் தேவனே - 2

தாழ்மையின் கோலம் ஏன் எடுத்தீரோ - 2

4. யேகோவா கர்த்தர் - எங்கள்

எல்லாம் வல்ல தேவன் - இயேசு

கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே - 2

கந்தைத் துணி தான் உம் போர்வையோ - 2

5. பிதாவின் மடியில் - செல்ல

பிளளையாக இருந்தீர் - தேவா

எம்மோடிருந்திட இம்மானுவேலராய் - 2

ஈனக்கோலம் தான் எடுத்து வந்திரோ - 2

6. ஜீவன் நிறைந்த தேவனே - எங்கள்

ஜீவாதிபதியாம் கர்த்தரே - மெய்

ஜீவ ஒளி தரும் ஜீவ பிதாவே - 2

மேசியாவாக மேதினியில் வந்தீரோ - 2

7. ஜனங்களின் பாவங்களை நீக்கி - தேவா

கிருபையால் இரட்சித்திடவே தம்

இயேசு என்ற இரட்சகராக - 2

இப் பூ உலகில் அவதரித்தீரோ ?

8. பாவத்தின் தண்டனையை - தாமே

பாவிகட்காய் அனுபவித்து - தேவா

பாவிகளை விட்டகற்றிடவும் - 2

பரமசந்தோஷம் கொடுக்கவும் வந்தீரோ - 2

9. கல்வாரிச் சிலுவை தனில் - கொடும்

வேதனைகளை அடைந்து - தேவா

பாடுபட்டு ஜீவன் விட்டிடவும் - 2

பரலோக ராஜ்யம் கொடுக்கவும் வந்திரோ - 2

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு