துதிப் பாடல்கள்

மன்னிக்கிற மா தெய்வமே

Mannikkira Maa Theyvamae

மன்னிக்கிற மா தெய்வமே

மன்னியுமே மைந்தா எமை

எங்கு நான் செல்வேன்

உம்மை விட்டு

ஏற்றுக் கொள்ளும்

என் தெய்வமே

1. எண் அரசின் கொடும் சிந்தையிலே

உம் சிரசில் முள் முடி சூடினேன்

2. எந்தன் வாய் வீண் பேச்சால்

உம் வாயில் காடி குடிக்கச் செய்தேன்

3. என் உடலில் (சரீர்) இச்சையினாலே

உம் உடலில் காயங்களே (சவுக்கடி)

4. என் கைகள் செய்த குற்றத்தாலே

உம் கையில் ஆணி பதிய செய்தேன்

5. எந்தன் நெஞ்சினில் சதிமோசத்தால்

உம் நெஞ்சில் ஈட்டி பாய செய்தேன்

6. என் கால்கள் செய்த பாவத்தால்

உம் காலில் ஆணி பாய செய்தேன்

7. கோபத்தால் உம்மை நோக்கி செய்தேன்

பாவத்தால் உம்மை பலியாக்கினேன்

பிரசன்டேஷன் & பிடித்தவை — முழு பயன்பாடு