மகிமை ராஜனுக்கு
மகத்துவ தேவனுக்கு
ஆராதனை செய்வோம் -வாருங்கள்
ஆண்டவரை - துதித்து பாட்டு - பாடுங்கள்
நித்தியராம் - உத்தமராம்
வல்லவராம் அவர் நல்லவராம்
உண்மையோடு நாம் துதித்தாலே
உலகத்தில் நமக்கு சந்தோஷமே (மகிமை)
அற்புதராம் அன்புள்ளவராம்
புனிதராம் -புருஷோத்தமனாம்
வாழ்க்கையிலே -அவரை -நம்பினாலே
நம் கண்ணீரை துடைத்திடுவாரே (மகிமை)
உயர்ந்தவராம் உன்னதராம்
நீதியானவராம் நீர்மல தேவனாம்
எப்பொழுதும் அவரை நினைத்தாலே
நம்மை சொர்க்கத்தில் சேர்த்துக்கொள்பவரே (மகிமை)