மாய உலகில் மயங்கி கிடக்கும் மனிதனே !
மன்னன் இயேசு வருகை மிகவும் சமீபமே !
நீ எழுந்து விரைந்து சென்றிடு - இறை
ராஜ்ஜியத்தின் போதனையை பரப்பிடு
கர்ஜிக்கும் சிங்கம் போல வருகின்றான்
சாத்தான் யாரை விழுங்கலாம் என்று பார்க்கின்றான்
நீ கலக்கம் கொள்ளாதே ! நீ திகைத்து நில்லாதே - 2
உலகில் இருக்கும் அவனை விட உன்னில் -
இருக்கும் இயேசு (பெரியவர்) - 3
-மாய உலகில்
யூத ராஜா கிறிஸ்து இயேசு வருகின்றார்
யுத்தம் செய்து சாத்தானை வீழ்த்துவார்
நாம் அகமகிழ்வோமே ! நாம் ஆர்ப்பரிப்போமே - 2
வெற்றி வீரர் இயேசு என்று முழங்கி
இங்கே கீதம் (பாடுவோம்) - 3
-மாய உலகில்